ஜிஎஸ்டி சீர் திருத்தத்தை தொடர்ந்து உணவு பொருட்களின் வரி விதிப்பு மாற்றங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி டெட்ரா பாக்கெட் பாலுக்கான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
12 சதவீத ஜிஎஸ்டியாக இருந்த உறைவிக்கப்பட்ட பால், சர்க்கரை கொண்டு தயாரிக்கப்பட்ட மிட்டாய்கள், பாதாம் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
பாஸ்தா, நூடுல்ஸ், உப்பு அல்லது காரம் சேர்க்கப்பட சிப்ஸ் வகைகள், பதப்படுத்தப்பட்ட காய்கள், பழங்களுக்கும் 5 சதவீதமாக ஜிஎஸ்டி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜாம் வகைகள், பழச்சாறுகள், தின்பண்டங்கள், மிக்சர் வகைகள், சோயா பால், குளிர் பானங்களுக்கும் 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.
18 சதவீதமாக இருந்த பார்லி, சர்க்கரை மிட்டாய்கள், கோகோவிலிருந்து தயாரிக்கப்பட்ட வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவீதமாக ஜிஎஸ்டி மாற்றியமைக்கப்பட்டுள்ளது
எண்ணெய், கோகோ மூலம் தயாரிக்கப்பட்ட உணவுகளுக்கும் 5 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கேக் வகைகள், பிஸ்கட், ஐஸ்கிரீம்கள், சூப் வகைகளுக்கும் 5 சதவீதமாக ஜிஎஸ்டி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.