ராணிப்பேட்டை அருகே கத்தியை காட்டி மிரட்டி இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவரக்கரை பகுதியில் அரசு தோட்டக்கலை தென்னம் வித்து பண்ணை
அமைந்துள்ளது. அங்கு ஆண் நண்பருடன் இளம்பெண் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 3 பேர், ஆண் நண்பரை சரமாரியாக தாக்கி அங்கிருந்து ஓட செய்தனர். பின்னர் தனியாக நின்ற பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த சிவராஜ், ராஜா, பார்த்திபன் ஆகிய 3 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.