டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.
சீனாவைச் சேர்ந்த டிக் டாக் செயலி உள்ளிட்ட 59 செயலிகள் தேசிய பாதுகாப்பு கருதி, 2020-ம் ஆண்டு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் டிக்டாக் செயலியின் செயல்முறைகள் தொடங்கி உள்ளதாக பரவி வருகின்றன.
இந்தநிலையில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி, டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை என்றும், அது தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.