குடியரசு துணை தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் இண்டி கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். குடியரசு துணை தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நபராக பிரதமர் மோடி தனது வாக்கை பதிவு செய்தார்.
குடியரசு துணை தலைவர் தேர்தலில் 781 எம்.பி-க்கள் வாக்களிக்க தகுதி பெற்றனர். ஆனால், சிலர் வாக்களிப்பதை புறக்கணித்த நிலையில், 770 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு, மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி, இன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.