டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவை ஒன்றிணைக்கப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குக் கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார்.
இபிஎஸ்-இன் நடவடிக்கைக்குக் காலம்தான் பதில் சொல்லும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்ற செங்கோட்டையன், உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்ததாகத் கூறப்படுகிறது. அமித்ஷாவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.