விலங்கு மையத்திற்கு நிதி திரட்டுவதற்காகக் கலிபோர்னியாவில் நாய்களுக்கான அலைச்சறுக்குப் போட்டி நடத்தப்பட்டது கவனத்தை ஈர்த்துள்ளது.
கலிபோர்னியாவின் Rancho Santa Fe பகுதியில் ஹெலன் உட்வார்ட் விலங்கு மையம் உள்ளது. இங்கு ஆதரவற்ற விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
பராமரிப்பு செலவுக்காக ஆண்டுதோறும் நாய்களுக்கான அலைச்சறுக்குப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் 20ஆம் ஆண்டு நாய்கள் அலைச்சறுக்குப் போட்டி களைகட்டியது. இதில் 50-க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் பங்கேற்று அலைகளில் சறுக்கி விளையாடி மகிழ்ந்தன.
இந்தப் போட்டி மூலம் திரட்டப்படும் நிதி, விலங்கு மையத்திற்கு வழங்கப்படவுள்ளது. ஆதரவற்ற விலங்குகளின் பராமரிப்பிற்காக வளர்ப்பு நாய்கள் களமிறங்கி உதவி செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.