ஈரோட்டில் காந்தி கண்ணாடி திரைப்படத்தை ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து நடிகர் பாலா கண்டு மகிழ்ந்தார்.
பாலா நடித்துள்ள காந்தி கண்ணாடி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் ஈரோடு அடுத்த திண்டல் பகுதியில் உள்ள திரையரங்கில் ஆதரவற்ற முதியவர்களுக்காகக் காந்தி கண்ணாடி படம் திரையிடப்பட்டது.
அப்போது நடிகர் பாலா திரையரங்கிற்குச் சென்று முதியவர்களுடன் ஒன்றாகப் படம் பார்த்து மகிழ்ந்தார். அப்போது பாலாவின் நடிப்பைப் பாராட்டி அவரை ஆரத்தழுவி முதியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்துப் பேட்டியளித்த நடிகர் பாலா, ஆதரவற்ற முதியவர்களுடன் படம் பார்த்தது மன நிம்மதி அளிப்பதாக உருக்கத்துடன் கூறினார்.
தொடர்ந்து சமூகச் சேவை செய்து வரும் நடிகர் பாலா, ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.