சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் 720 ரூபாய் உயர்ந்து 81 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்காவின் வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது வெகுவாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் சென்னையில் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. அதன் படி ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 90 ரூபாய் அதிகரித்து 10 ஆயிரத்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல ஒரு சவரன் தங்கம் 720 ரூபாய் அதிகரித்து 81 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 140 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.