உத்தரபிரதேச மாநிலம் கோட்வாலி தேஹோட் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.
கோட்வாலி தேஹோட் பகுதியில் உள்ள நியோராய் கிராமத்தில் எதிர்பாராதவிதமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
இச்சம்பவத்தில் வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் இடிபாடுகளில் புதைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கிய 4 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் இருவர் உயிரிழந்த நிலையில் இருவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.