கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தில் கஞ்சா போதையில் 4 பேரை கொடூரமாக தாக்கி ரீல்ஸ் வீடியோ எடுத்த ரவுடியை போலீசார் சுட்டு பிடித்தனர்.
விருத்தாச்சலத்தில் கஞ்சா போதையில் சுற்றிய ரவுடிகள் சிலர் பொதுமக்களை பீர் பாட்டில் உள்ளிட்டவற்றால் தாக்கி, அதனை வீடியோவாக எடுத்து ரீல்ஸ் பதிவிட்டனர்.
விசாரணையில் ரவுடி கந்தவேல், அவரது கூட்டாளி சிவா உள்ளிட்டோரே இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில் அவர்கள் பெரிய கண்டியாங்குப்பத்தில் உள்ள முந்திரி தோப்பில் பதுங்கி இருப்பதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் ரவுடிகளைக் கைது செய்ய முயன்றனர். அப்போது ரவுடி கந்தவேல் கத்தியால் தாக்கியதையடுத்து, அவரை முழங்காலுக்குக் கீழே போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
மேலும், அவருடன் இருந்த கூட்டாளி சிவா தப்ப முயன்ற போது படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து சுட்டுப்பிடிக்கப்பட்ட ரவுடி, காயமடைந்த போலீசார் உள்ளிட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.