கோவை அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தந்தையை வீல் சேர் இல்லாததால் கடும் சிரமத்துடன் மகன் அழைத்துச் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து செல்லும் நபர்களை சக்கர நாற்காலிகள் அல்லது ஸ்ட்ரெச்சர்களில் உறவினர்கள் அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால் மருத்துவமனையில் போதிய சக்கர நாற்காலிகள் இல்லாததால் உடல்நிலை பாதிக்கப்பட்ட தந்தையை, கடும் சிரமத்துடன் மகனே இழுத்துச் சென்றார்.
இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், உதவிசெய்ய ஊழியர்கள் முன்வரவில்லை எனப் பாதிக்கப்பட்ட தரப்பினர் வேதனை தெரிவித்துள்ளனர்.