தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் சங்கரநாராயணசாமி கோயிலில் மழைநீர் பெருக்கெடுத்தது.
சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை கொட்டி தீர்த்தது.
இடி மின்னலுடன் கூடிய கனமழையால் சங்கரநாராயணசாமி கோயிலில் மழைநீர் புகுந்தது. இதனால் மழைநீரில் நடந்து சென்றபடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.