காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்கப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதியப்பட்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்யாத காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவானது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்வது, புலன் விசாரணை அதிகாரியின் அதிகாரத்திற்கு உட்பட்டது எனத் தெரிவித்த நீதிபதி,
டி.எஸ்.பி. சங்கர்க் கணேஷை சிறையில் அடைக்கப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.