சிவகங்கையில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் பங்கேற்று மாற்று திறனாளிகள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
சிவகங்கையில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆனையத்தின் சார்பில், மாற்று திறனாளிகளுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நடைபெற்றது.
அப்போது 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், கபடி போன்ற போட்டிகளில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
போட்டியின் முடிவில் வெற்றிப் பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதலிடம் பிடித்த நபர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்கப்பட உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.