சீனாவைத் தாக்கிய டபா சூறாவளி கரையை கடந்த நிலையில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள தைஷான் நகரின் கடற்கரையில் டபா சூறாவளி கரையைக் கடந்தது.
குவாங்டாங் மற்றும் குவாங்சி முழுவதும் பலத்த காற்று மற்றும் பலத்த மழைக் கொட்டி தீர்த்தது. ஜியாங்சு, அன்ஹுய், ஹூபே, ஜெஜியாங், ஜியாங்சி மற்றும் ஹுனான் ஆகிய பகுதிகளிலும் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.