சென்னையில் தொழிலதிபர் வீடு உட்பட 5 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை வேளச்சேரி அருகே உள்ள குல்மோகர் அவென்யூவில் வசித்து வரும் தொழிலதிபர் அமீத் பிஸ்னாய் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோதப் பணபரிவர்த்தனை புகாரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமீத் பிஸ்னாய் வீட்டில் அதிகாரிகள் ரெய்டு நடத்திய நிலையில், மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, அடையார் காந்திநகரில் உள்ள மருத்துவர் இந்திரா மற்றும் மேற்கு மாம்பலத்தில் உள்ள சுப்பிரமணி ராமச்சந்திரன் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.