நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் மனைவி ராஜ்யலட்சுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாள அரசின் ஊழலுக்கு எதிராக 2-வது நாளாகவும் போராட்டம் தொடர்ந்த நிலையில், காத்மாண்டுவில் முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீட்டுக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
இதில் அவரது மனைவி ராஜ்யலட்சுமி படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுதொடர்பான காட்சிகள் வைரலான நிலையில், அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றிய பின்னரும் போராட்டக்காரர்கள் எதற்காக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர் எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.