திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிராமத்தில் போலி ஆவணம் தயார் செய்து விவசாயிகளின் நிலத்தை திமுக கவுன்சிலர் அபகரிக்க முயல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாகனம்பட்டி பகுதியில் நல்லுசாமி மற்றும் அவரது உறவினர்களின் 83 சென்ட் நிலம் உள்ளது. இதனைப் போலி ஆவணம் தயார் செய்து திமுகக் கவுன்சிலர் நாட்ராயன் அபகரிக்க முயன்றுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. அலுவலகத்தில் பலமுறைப் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர், திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்பத்துடன் தீக்குளிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.