பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட முயன்ற ஆசிரியர்களை போலீசார் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர்
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தை மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.
போராட்டம் குறித்து முன்பே அறிந்த காவல்துறையினர் 100க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து வளாகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.
அப்போது, ஆட்சிக்கு வரும் முன்பு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டினர்.
மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்தனர்.