சேலம் ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் உள்ள ராமகிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகத்தின் மண்டல பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 31-ம் தேதி ராமகிருஷ்ணர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மண்டல பூஜைகள் நடந்து வருகிறது.
இதில் தினந்தோறும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. சேலம் சௌராஷ்டிரா முன்னேற்ற தொண்டு அமைப்பின் சார்பில் விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு விஷ்ணு சகஸ்ர நாமத்தைப் பாடி வழிபட்டனர்.