புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அனுமதியின்றிச் செயல்பட்ட இறால் பண்ணை குட்டைகளை அகற்ற சென்ற அதிகாரிகளிடம் பண்ணை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மணமேல்குடி கிராமத்தில் 50க்கும் மேற்பட்டோர் இறால் பண்ணை அமைத்துத் தொழில் செய்து வந்துள்ளனர். இதில் கணேசன் உட்பட சிலர் உரிய அனுமதி பெறாமல் பண்ணை அமைத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்துப் புகார் எழுந்த நிலையில், கணேசனின் இறால் பண்ணைக்குச் சென்ற அதிகாரிகள், ஜேசிபி இயந்திரம் மூலம் குட்டையில் இருந்த தண்ணீரை வெளியேற்ற முயன்றனர்.
அப்போது, முன்னறிவிப்பின்றி அதிகாரிகள் தண்ணீரை வெளியேற்றுவதாகக் குற்றஞ்சாட்டிய கணேசன் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.