நேபாளத்தில் வெடித்த வன்முறையைப் பயன்படுத்தி சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த மக்கள், கைகளுக்குக் கிடைத்த பொருட்களை அள்ளி சென்றனர்.
பிரதமர் கேபி சர்மா ஒலி தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது. இவர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், யூடியூப் உள்பட 26 சமூக வலைதளங்களுக்குப் பிரதமர் கேபி சர்மா ஒலி தடை விதித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையானது.
இதையடுத்துக் கேபி சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து நாட்டை ராணுவம் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.
இந்த நிலையில், ஏராளமான மக்கள் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி, மிக்சி, கிரைண்டர், ஆடைகள், உணவு பொருட்கள் உள்பட பல விலை உயர்ந்த பொருட்களை அள்ளி சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.