விழுப்புரம் அருகே இளைஞரின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிடாகம் பகுதியை சேர்ந்த சஞ்சய் குமார் என்பவர், விழுப்புரத்தில் நடைபெற்று வரும் பொருட்காட்சிக்கு அண்மையில் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
அப்போது கஞ்சா போதையில் இருந்த சிலர், சஞ்சய் குமாரையும் அவரது நண்பர்களையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் சஞ்சய்குமார் படுகாயமடைந்தார்.
இது தொடர்பாகச் சஞ்சய்குமார் தரப்பில் விழுப்புரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் கல்லூரிக்குச் செல்லும் வழியில் சஞ்சய்குமாருக்கு, வழுதரெட்டி பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் சஞ்சய்குமார் நேற்று திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதனிடையே கல்லூரி மாணவரின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி விழுப்புரம் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையிலும் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.