அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள லாங் பீச் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கோ கப்பலில் 50க்கும் மேற்பட்ட கண்டெய்னர்கள் கடலில் சரிந்து விழுந்தன.
சீனாவில் இருந்து கப்பல் வந்த சில மணி நேரங்களிலேயே கண்டெய்னர்கள் கீழே விழுந்தன.
இந்தக் கண்டெய்னர்கள் கப்பலின் பாரம் தாங்காமல் விழுந்திருக்கலாம் என்று கருதப்படும் நிலையில், விபத்திற்கான காரணம் உறுதிபடுத்தப்படவில்லை.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தற்போது கடலில் விழுந்த கண்டெய்னர்களை மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.