எமர்ஜென்சி காலத்தின் தீவிர களச் செயற்பாட்டாளர் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ஆர்.எஸ்.எஸ். பேரியக்கத்தின் தலைவர் மோகன் பகவத் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
மோகன் பகவத் நீண்ட ஆயுளுடன் தொடர்ந்து மக்கள் பணியாற்றவும், தேசத்தின் வளர்ச்சிக்காக பாடுபடவும் எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க வேண்டி பிரார்த்திக்கிறேன் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.