திருப்பூரில் சாலை விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, திமுக பேரூராட்சி தலைவர் கைது செய்யப்பட்டார்.
பல்லடம் அடுத்த சாமளாபுரம் பேரூராட்சி தலைவராக இருப்பவர் விநாயகா பழனிச்சாமி. இவர், காரணம்பேட்டையில் இருந்து தனது இல்லத்திற்கு சொகுசு காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. கருகம்பாளையம் பகுதியில் சென்றபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, அதிவேகத்தில் சென்ற விநாயகா பழனிச்சாமி காரை முதியவர் மீது மோதவிட்டு நிற்காமல் சென்றுள்ளார்.
இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், திமுக பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.