திண்டுக்கல் மாவட்டம் சிறுமலைக்கு செல்லக்கூடிய வாகனங்களுக்கு முறைகேடாக நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சிறுமலையில் 18 கொண்டை ஊசி வளைவுகளும், பல்வேறு அரிய வகை உயிரினங்கள் மற்றும் மூலிகைகளும் உள்ளன. இந்நிலையில் வனத்துறை சோதனைச் சாவடியில் சிறுமலை சுற்று சூழல் மேம்பாட்டு குழு என்ற பெயரில் எந்த ஒரு ஆதாரமும் இன்றி நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.