கனமழையை பயன்படுத்தி திருமணிமுத்தாறில் சாயக்கழிவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சேலம் சேர்வராயன் மலை மற்றும் நகர் பகுதியில் இரவு 2 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்த நிலையில், தாழ்வான பகுதிகளில் தேங்கிய வெள்ளநீர் திருமணிமுத்தாற்றில் கலந்தது. இதனை சாதகமாக பயன்படுத்திய சாய ஆலை உரிமையாளர்கள் பல நாட்களாக தேக்கி வைத்திருந்த சாயக்கழிவுகளை ஆற்றில் திறந்துவிட்டனர்.
திருமணிமுத்தாற்றில் வெள்ள நீரை மிஞ்சும் வகையில் சாயக்கழிவுநீர் நுரை பொங்கியபடி சென்றதைக் கண்டு விவசாயிகள் வேதனையடைந்தனர். நீர்நிலைகளில் சாயக்கழிவுகள் கலப்பதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.