போக்குவரத்து விதிமீறல் அபராத நிலுவை தொகையை கட்டினால் மட்டுமே இன்சூரன்ஸை புதுப்பிக்க முடியும் என்ற நடைமுறையை கொண்டுவர போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றாதோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
திகளை மீறி அபராதம் விதிக்கப்பட்டவர்களில் பலர் இன்னும் அபராத தொகையை கட்டாமல் இருப்பதாகவும், நிலுவையில் உள்ள அபராதத் தொகையை செலுத்துவதற்காக புதிய நடைமுறையை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
வாகன உரிமையாளர் பெயர் மாற்றம், லைசென்ஸ் புதுப்பிப்பு, எப்சி போன்றவற்றில் அபராத நிலுவை தொகையை செலுத்த வேண்டும் என்ற நடைமுறை உள்ளது என்றும், தற்போது, விதிமீறல் அபராத நிலுவை தொகையை கட்டினால் மட்டுமே இன்சூரன்ஸை புதுப்பிக்க முடியும் என்ற நடைமுறையை கொண்டுவர முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், நிலுவை அபராத தொகை தொடர்பாக போக்குவரத்து துறை, தனியார் இன்சூரன்ஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.