தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த நகைகள் கொள்யைடிக்கப்பட்டது தொட்ர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்வான் லேக் அபார்ட்மெண்டில், 50 வயதான ரேணு என்பவர் தனது மகன் மற்றும் கணவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ரேணுவின் கணவர் அகர்வால் மற்றும் அவரது மகன், தொழில் ரீதியாக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர்.
பின்னர், அகர்வால் தனது மனைவியை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், ரேணு, தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்கவில்லை. அவரது வழக்கத்திற்கு மாறான இந்த நடவடிக்கையால் சந்தேகமடைந்த அகர்வால், அலுவலகத்தில் இருந்து மகனுக்கு முன்பே புறப்பட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
கதவு பூட்டப்பட்டு இருந்ததால், பால்கனி வழியாக உள்ளே நுழைந்து கதவை திறந்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே ரேணு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அகர்வால், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
விசாரணையில், தாக்குதல் நடத்தியவர்கள் ரேணுவின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு குக்கரால் தாக்கியதும், தொடர்ந்து கத்தி மற்றும் கத்திரிக்கோலை பயன்படுத்தி கழுத்தை அறுத்து கொலை செய்ததும் தெரிய வந்தது. பின்பு வீடு முழுவதும் தேடி சுமார் 40 கிராம் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் வீட்டின் பணியாளர் மற்றும் பக்கத்து வீட்டில் வேலை செய்து வந்த மற்றொரு நபர், பிரதான குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படுகின்றனர். இதுகுறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.