கருவுறுதல் விகிதம் குறைவாக இருப்பதால், புதிய தாய்மார்களை ஆதரிப்பதற்கும், பிரசவத்தை ஊக்குவிப்பதற்கும் பல்வேறு சலுகைகளை தென்கொரிய அரசு வழங்குகிறது.
தென்கொரியாவின் பிறப்பு விகிதம் ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், இந்த நூற்றாண்டின் இறுதியில் தென்கொரியாவின் மக்கள் தொகை இப்போது இருப்பதை விட பாதிக்கும் குறைவாக மாறும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிப்பதற்காக தென்கொரிய அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.
அந்த வகையில், தென்கொரிய நபரை இந்தியாவைச் சேர்ந்த அரோரா என்ற பெண் திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களில் அவருக்கு கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது. இதனால் உடனடியாக, மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்துகளுக்காக தென்கொரிய அரசாங்கம், 63 ஆயிரத்து 100 ரூபாய் வழங்கியதாகவும், பொது போக்குவரத்து செலவுகளுக்காக 44 ஆயிரத்து 30 ரூபாய் வழங்கியதாகவும் அரோரா வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.