குடியரசு துணை தலைவராக பதவியேற்ற சிபிஆருக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், பாரத தேசத்தின் 15-வது துணைக் குடியரசுத் தலைவராக இன்று பொறுப்பேற்றிருக்கும், அண்ணன் திரு.சி.பி.இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
மக்கள் சேவகராக, பாராளுமன்ற உறுப்பினராக, மாநில ஆளுநராக என்று சமூகத்திற்கு பெரும் சேவைகள் ஆற்றி வந்த.சி.பி.இராதாகிருஷ்ணன் தேசத்தின் மதிப்பிற்குரிய பொறுப்புகளில் ஒன்றான துணைக் குடியரசுத் தலைவராக தேசப் பணியாற்றிட நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.