டெல்லியில் பிரதமர் மோடி முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.
டெல்லியில் குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்த பிறகு காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சி.பி.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை தலைவர் அறைக்கு சென்றார்.
அங்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அர்ஜுன் ராம் மேக்வால், எல்.முருகன் உள்ளிட்டோர் அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் தனது இருக்கையில் அமர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், கோப்புகளில் கையெழுத்திட்டு குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.