இந்தியாவின் இலகுரகப் போர் விமான திட்டத்திற்கு பெரிய ஊக்கமாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம், மூன்றாவது F404 எஞ்சினை, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸுக்கு வழங்கியுள்ளது.
F404 என்பது ஜெனரல் எலெக்ட்ரிக் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு டர்போஃபான் இயந்திரம். இது இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் லைட் காம்பாட் ஏர்கிராஃப்ட் Mk1A போர் விமானங்களில் பயன்படுத்தப்படுகிறது.
GE ஏரோஸ்பேஸ், தேஜாஸ் விமானங்களுக்கு 99 F404-IN20 இயந்திரங்களை இந்தியாவுக்கு வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த இயந்திரங்கள், கடந்த ஏப்ரல் முதல் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் மூன்றாவது F404 எஞ்சின், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.