டிரம்ப் ஆதரவாளரான சார்லி கிர்க் கொலைக் குற்றவாளியின் புகைப்படங்களை வெளியிட்ட FBI, அவரது தலைக்கு 88 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.
அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க், உட்டா பல்கலை கழகத்தில் மாணவர்களிடையே துப்பாக்கி வன்முறை குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் குண்டு துளைத்தால் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சந்தேக நபரின் இரண்டு படங்களை FBI வெளியிட்டுள்ளது.
சந்தேக நபர்க் கல்லூரி பயிலும் வயதுடையவராகத் தோன்றியதாகவும், அவர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் 88 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.