சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நரசோதிப்பட்டி பகுதியில் வசித்து வரும் சிட்கோ இணை இயக்குநர் சிவகுமார் ஓசூருக்கும், அவரது மனைவியான வேளாண் உதவி இயக்குநர் மணிமேகலாதேவி நாமக்கல் மாவட்டத்திற்கும் பணி நிமித்தமாகச் சென்றிருந்தனர்.
பணி முடிந்து இருவரும் வீட்டிற்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டுப் பீரோவில் இருந்த 56 சவரன் நகை மற்றும் 95 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
மேலும், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.