நேபாள போராட்டத்தின்போது இந்திய பக்தர்கள் சென்ற பேருந்து அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து நேபாளத்தில் இளைஞர்கள் கொதித்து எழுந்தனர்.
நாடாளுமன்ற கட்டடம், அரசு அலுவலகங்கள், பிரதமர், அமைச்சர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இளைஞர்களின் போராட்டத்தால் பிரதமர் ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்யும் நிலையும் ஏற்பட்டது. தற்போது நேபாளத்தில் போராட்டம் அடங்கி இயல்புநிலைத் திரும்பி வருகிறது.
இந்நிலையில் போராட்டத்தின்போது இந்திய பக்தர்கள் சென்ற சுற்றுலா பேருந்து தாக்கப்பட்டதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த பக்தர்கள், காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோயிலுக்குச் சென்றுவிட்டுப் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு கும்பல், பேருந்தைத் தாக்கி அவர்களின் உடைமைகளைக் கொள்ளையடித்தனர். இந்தத் தாக்குதலில் 8 பேர் காயம் அடைந்ததாகவும் அப்போது தங்களுக்கு ராணுவ வீரர் ஒருவர் உதவியதாகவும் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.