தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 150 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனை குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில், தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனை குழு உறுப்பினர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் செப்டம்பர் 21 முதல் நவம்பர் 30 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும், வழக்கமான ரயில்கள் தவிர்த்து கூடுதலாக 150 ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
சிறப்பு ரயில்களில் அக்டோபர் 13 முதல் 26 மற்றும் நவம்பர் 17 முதல் டிசம்பர் 1 வரை பயணிக்கும் ரயில்வே பயனாளர்களுக்கு 20 சதவீதம் சலுகை வழங்குவதாகவும், மக்களின் தேவைக்கேற்ப 2 ஆயிரத்து 500 பொது பெட்டிகள் தயாரிக்க உள்ளதாக மத்திய ரயில்வே
அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்ததாகவும் சுட்டி காட்டியுள்ளார்.