ஆடித் திருவிழாவை ஒட்டி சென்னை பூந்தமல்லி அருகே நாகாத்தம்மன் கோயிலில் சுவாமிக்கு 500 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது.
நசரத்பேட்டையில் பழமை வாய்ந்த ஸ்ரீநாகாத்தம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடித்திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பெரியபாளையம் கோயிலில் இருந்து பக்தர்கள் பால் குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் மூலவருக்கு 500 பால்குடம் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.