நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்றுக் கொண்டார்.
நேபாளத்தில் சமூக ஊடக தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் கடந்த 8ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். இது வன்முறையில் முடிந்தது. கூட்டத்தை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர். 900க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 51 ஆக அதிகரித்தது. நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார். அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர். இதன் பின் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
இந்த நிலையில் அதிபர், ராணுவம், மாணவர் பிரதிநிதிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்றார். தேர்தல் நடத்தி புதிய அரசு பதவியேற்கும் வரை, அவர் இந்தப்பதவியில் இருப்பார்.