ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவரை நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் மூன்று பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவரும், பாமக மாவட்ட செயலாளருமான மக ஸ்டாலினை, கடந்த ஐந்தாம் தேதி பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்குள் வைத்து, காரில் வந்த மர்மகும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி கொலை செய்ய முயன்றனர். சுதாரித்துக் கொண்ட அவர் உயிர் தப்பினார்.
இதுதொடர்பாக சேலத்தில் பதுங்கி இருந்த மகேஷ் மற்றும் மருதுபாண்டி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொடுத்த லட்சுமணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில், முக்கிய குற்றவாளிகளான ஹரிஹரன், மகாலிங்கம், விஜய் ஆகிய மூவரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சரணடைந்தனர்.