திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
பழனி மலை அடிவாரத்தில் உள்ள தேவர் சிலை பின்புறம் சுமார் 1 புள்ளி 40 ஏக்கர் காலியிடம், தனி நபர்கள் ஆக்கிரமிப்பால் கடந்த 50 ஆண்டுகளாக பயன்பாடின்றி இருந்தது.
இந்த நிலம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதிகள், மடத்திற்கு தர்க்காராக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் இணை ஆணையரை நியமித்தனர்.
இதனையடுத்து, ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலத்தை அதிகாரிகள் மீட்டு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.