சென்னை ராமாபுரம் காவல் நிலையத்திற்குக் கஞ்சா போதையில் காவலர் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ராமாபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் பிரபு, காவல் நிலையத்திற்கு மது மற்றும் கஞ்சா போதையில் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கஞ்சா பயன்படுத்திவிட்டுக் காவல் நிலையம் வந்த காவலர்ப் பிரபுவை, காவல் ஆய்வாளர் மற்றும் சகக் காவலர்கள் கண்டித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த காவலர் பிரபு, அவர்களை தரக்குறைவாக பேசி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காவலர்ப் பிரபு மீது விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் காவல் நிலையத்திற்குப் போதையில் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.