நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடி, கடையை உடைத்துத் தின்பண்டங்களை உண்ணும் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.
குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதாகக் கூறப்படும் நிலையில், பாய்ஸ் கம்பெனி பகுதியில் சுற்றித் திரிந்த கரடி ஒன்று, அங்குள்ள கடையின் கதவை உடைத்து உணவு பொருட்களை தேடியது.
பின்னர் அங்கிருந்த சில திண்பண்டங்களை எடுத்து உண்ட கரடி, பின்னர் அங்கிருந்து ஓடியது. குடியிருப்புக்குள் உலா வரும் கரடியை வனப்பகுதிக்குள் விரட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.