டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது இரண்டு வழக்கறிஞர்கள் வாக்குவாதம் செய்த காரசாரமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொழிலதிபர் சஞ்சய் கபூரின் மறைவை தொடர்ந்து அவரது இரண்டு மனைவிகளுக்கு இடையே மோதல் உருவானது. சஞ்சய் கபூரின் 30 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளுக்காக இருவரும் நீதிமன்றத்தை அணுகினர்.
இந்த வழக்கு விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது கரிஷ்மா கபூர் சார்பில் ஆஜரான மகேஷ் ஜெத்மலானிக்கும், பிரியா சச்தேவ் கபூர் சார்பில் ஆஜரான ராஜீவ் நாயர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
அப்போது, ராஜிவ் நாயர் பேசிக் கொண்டிருந்த போது மகேஷ் ஜெத்மலானி குறுக்கிட்டதால் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.