பாலி தீவில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்தோனேசியாவின் பாலி தீவில் கனமழை கொட்டித் தீர்த்ததால் தீவு முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் சேதமடைந்தன.
இந்தப் பேரிடரில் சிக்கி இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானதாகவும் கூறப்படுகிறது.