ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஈக்வடார் அதிபர் நோபோ, புதிய பொருளாதாரக் கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
இதனால் அரசு ஊழியர்களின் ஊதியம் குறைப்பு மற்றும் பணிநீக்கம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிராக ஈக்வடார் நாட்டில் உள்ள பல்வேறு சமூக அமைப்புகள் கொதித்தெழுந்துபோராட்டத்தில் குதித்துள்ளன.
அதிபர் நோபோ பதவி விலக வலியுறுத்தி மாளிகையை நோக்கி அவர்கள் பேரணியாகச் சென்ற நிலையில் போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தினர்.
இதனால் இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு. போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. பதிலுக்குக் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடித்தியும் போராட்டக்காரர்களை விரட்ட போலீசார் முயன்றனர்.
நேபாளத்தைத் தொடர்ந்து ஈக்வடாரிலும் அரசுக்கு எதிராகப் போராட்டம் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.