34 ஆண்டுகளாக மக்களை சிரிக்கை வைத்து மகிழ்வித்து வரும் வைகைப் புயல் வடிவேலு தனது 65 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.
1991-ல் என் ராசாவின் மனசிலே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் வடிவேலு இதுவரை 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
காமெடி உலகில் தனக்கெனத் தனி இடம் பிடித்த அவர், சினிமாவில் நடிக்காத காலத்திலும் மீம்ஸ்களாக வலம் வந்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.
காமெடி மட்டுமின்றிப் பாடல்கள் மூலமும் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் வடிவேலு. தனது பிறந்தநாளை ஒட்டி நடிகர் வடிவேலு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மக்கள்தான் கடவுள் எனவும் அவர்கள் இல்லை எனில் இந்த வடிவேலு இல்லை எனவும் உருக்கத்துடன் கூறியுள்ளார்.