உடல் எடையைக் குறைக்கும் ஊழியர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் போனஸ் வழங்கப்படும் எனச் சீன நிறுவனம் அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகில் 8 பேரில் ஒருவர், உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடல் பருமனே பல்வேறு நோய்களுக்கும் அடிப்படைக் காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தநிலையில், உடல் பருமனைக் குறைக்க வித்தியாசமான முயற்சியைச் சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் கையில் எடுத்துள்ளது.
உடல் எடையைக் குறைக்கும் ஊழியர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் போனஸ் அளிக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
குறைக்கும் ஒவ்வொரு அரைக் கிலோவிற்கும் சுமார் 6 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
ஆனால் இதில் ஒரு சிக்கலையைும் அந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. சவாலில் வென்ற பிறகு மீண்டும் எடைக் கூடினால், ஒவ்வொரு அரைக் கிலோ எடைக்கும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.