சென்னை அம்பத்தூர் அருகே கட்டிட பணியின் போது தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிருக்குப் போராடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரட்டூர் ரயில் நிலைய சாலையில் உள்ள தில்லை அம்மன் கோயில் எதிரே அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இதில் பாஸ்கர் என்ற கட்டிட தொழிலாளி பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கட்டிட பணிகளுக்கான இரும்பு கம்பி வீட்டிற்கு அருகில் செல்லக் கூடிய உயர் மின்னழுத்த வயரின் மீது உரசியது. இதில் தூக்கி வீசப்பட்ட கட்டிட தொழிலாளி பாஸ்கர் உயிருக்குப் போராடினார்.
தொடர்ந்து படுகாயமடைந்த பாஸ்கரை மீட்ட சகத் தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றித் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.